ராமநாதபுரத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை 71 வயது டாக்டர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சேதுபதி நகரை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). டாக்டரான இவர், பாரதி நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2ம் தேதி 19 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். பரிசோதனையின் போது டாக்டர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் கூறி ராமநாதபுரம் மகளிர் போலீசில் அப்பெண் புகார் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து டாக்டர் ஜபருல்லா கான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜபருல்லா கானை அக்.18 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக கூறிய ஜபருல்லா கான், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: