பொது கழிவறையை சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றம்

சின்னாளபட்டி: பேரூராட்சி ஆணையாளரின் உத்தரவின்பேரில், சின்னாளபட்டியில் பொது கழிவறை சுத்தம் செய்யப்பட்டு, அதனை சுற்றி வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 1வது வார்டு ஆதிதிராவிடர் காலனி (காமாட்சி நகர்) பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிவறை மிகவும் சேதமடைந்து, கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரப்பும் நிலையில் இருந்தது. பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ், அதிரடியாக உள்ளே சென்று பார்வையிட்டார்.

மேலும் கழிவறையின் அருகே உள்ள செப்டிக் டேங்க் மூடி சரிவராமல் மூடாமல் திறந்து கிடப்பதை பார்த்து அதை முறைப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் கழிவறையை சுற்றி வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்டு, அதனை சுற்றி வளர்ந்திருந்த முட்செடிகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது கழிவறை பளீச்சென காணப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: