நெல்லையில் காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை

நெல்லை : முன்னாள் முதல்வர் காமராஜரின் 48வது  நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மண்டல தலைவர்கள் கெங்காராஜ், ஐயப்பன், பிவிடி ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் மாரியப்பன், வெள்ளப்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் மகேந்திரபாண்டியன், கே.எஸ் மணி, மானூர் வட்டார தலைவர் பாக்கியகுமார், ஐஎன்டியூசி ராதாகிருஷ்ணன், பகுதி செயலளர் சின்னப்பாண்டியன், நிர்வாகிகள் குறிச்சி கிருஷ்ணன், அழகை கிருஷ்ணன், வண்ணை சுப்பிரமணியன், சம்சா செய்யதுபாய், ஜெயினுலாப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோட்டூர், டவுன், தச்சநல்லூர் ஆகிய இடங்களில் காந்தி சிலைக்கும், கட்சி அலுவலகம் முன்புள்ள காமராஜர் சிலைக்கும் மாலையணிவிக்கப்பட்டது.

நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் தலைவர் வித்யாகண்ணன் தலைமையில் சட்ட ஆலோசகர் செந்தில்வேல்குமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செயலாளர் சரத்மணி, பொருளாளர் தங்கவேல், நிர்வாகிகள் சிவா, காசி, இளங்கோ, பிரசன்னா உள்ளிட்டோர் மாலையணிவித்தனர்.

நெல்லை காமராஜர் முன்னேற்ற கழகம் சார்பில் தலைவர் சார்லஸ் சாலமோன் தலைமையில் அமைப்பினர் மாலை அணிவித்தனர். பொருளாளர் கமலஸ் ஜார்ஜ், துணை தலைவர் அல்டினோ லூயிஸ், பக்கப்பட்டி ராஜ், டேவிட், வக்கில் சகாய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தொழிற்சங்கம் சார்பில் ஆவின் அண்ணாசாமி, பொருளாளர் ரமேஷ், அமைப்பு செயலாளர் குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், தச்சை தெற்கு பகுதி செயலாளர் கோட்டூர் ராஜா, நிர்வாகிகள் குருசாமி, நெப்போலியன் ராஜா, குமாரசாமி, மாணிக்கம், கனி, மணி மற்றும் இளைஞரணி வி.பி. சரவணன், மகாராஜன், நாகராஜன், மகேஷ் கண்ணன், தச்்சை வடக்கு பகுதி செயலாளர் செல்வசேகர், மின்வாரியம் முத்துராமன், வட்டச் செயலாளர் பரதேசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், மாணவரணி முத்துப்பாண்டி, தொண்டரணி மகாராஜன், ராஜா, முருகேசன், இசக்கிமுத்து, பரமசிவ பாண்டியன், ஹரிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேமுதிக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், அவைத் தலைவர் மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்ஸஸ் புன்னகை தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். மாவட்ட துணைத் தலைவர் டிபிஎஸ் சுப்பிரமணியன், தாயப்பன், மகளிரணி உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.பா.ஜ. சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் இளைஞரணி வேல் ஆறுமுகம், முருகதாஸ், அமைப்பு சாரா அணி சீதாபதி, மேகநாதன், பாலமுருகன், நெசவாளர் அணி கோபால் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமக நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஞானசேகர் தலைமையில் நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி சரத்கண்ணன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பகுதி செயலாளர்கள் பாளை ஜெயகணேஷ், மேலப்பாளையம் கண்ணன், நாரணம்மாள்புரம் பேரூராட்சி செயலாளர் சரத்சிவா, பகுதி துணைச் செயலாளர்கள் சரத் காசி, நாராயணன், நிர்வாகிகள் அருள்மணி, முத்து அண்ணாமலை, முத்துசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கேஎம்ஏ நிஜாம் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், வக்கீல் அரசு அமல்ராஜ், ஒன்றிய செயலாளர் ராமையன்பட்டி மஸ்தான், சுகந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் டேனியல் ஆபிரகாம், துளசிநம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராஜன், பாளை பகுதி செயலாளர் மணி, மணிகண்டன், அமைப்பாளர்கள் வக்கீல் மகாராஜன், லட்சுமணன், பொருளாளர் பிச்சுமணி, துணைச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியினர் நிறுவனத் தலைவர் வியனரசு தலைமையிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையிலும், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் காவேரி தலைமையிலும் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: