26ம் தேதி 20,583 மெகாவாட் பதிவு மின் தேவை, பயன்பாட்டில் 451.79 மி.யூனிட் புதிய உச்சம்: மின்வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஏப். 26ம் தேதி மாநிலத்தின் மின் தேவை 20,583 மெகா வாட்டாகவும், மின் பயன்பாடு 451.79 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தையும் எட்டியது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 20ம் தேதியன்றே மின்சார பயன்பாடு 423.79 மில்லியன் யூனிட்டாகவும், மார்ச் 22ம் தேதி 19,407 மெகாவாட்டாகவும் பதிவாகி கடந்த ஆண்டின் அளவை கடந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் 26ம் தேதி 426.44 மி.யூ., ஏப்.2ம் தேதி 430.13 மி.யூ., ஏப்.3ம் தேதி 435.85 மி.யூ., ஏப்.4ம் தேதி 440.89 மி.யூ., ஏப்.5ம் தேதி 441.18 மி.யூ. ஏப்.17ம் தேதி 442.74 மி.யூ, ஏப்.18ம் தேதி 448.21 மில்லியன் யூனிட் என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது.

அதேபோல ஏப்.3ம் தேதி 19,413 மெகாவாட், ஏப்.4ம் தேதி 19,415 மெ.வாட், ஏப்.5ம் தேதி 19850 மெ.வாட், ஏப்.8ம் தேதி 20,125 மெ.வாட், ஏப்.18ம் தேதி 20,341 மெகாவாட் என்ற அளவுகளில் மின் தேவை பதிவானது. ஆனால் தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை மின் வாரியம் எட்டியுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியதாவது:

மீண்டும் மீண்டும் புதிய உச்சம் மாநிலத்தின் மின் தேவை மற்றும் பயன்பாடு. தொடர்ந்து சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது. புதிய உச்சம் ஏப்.26ம் தேதி மாலை 3.30 – 4 மணி இடையே 20,583 மெ.வாட், முந்தைய உச்சம் 20341 மெ.வாட் ஆக இருந்தது. ஏப்.26ம் தேதி பயன்பாடு 451.79 மில்லியன் யூனிட், முந்தய உச்சம் 448.21 மில்லியன் யூனிட் ஆக பதிவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 26ம் தேதி 20,583 மெகாவாட் பதிவு மின் தேவை, பயன்பாட்டில் 451.79 மி.யூனிட் புதிய உச்சம்: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: