ஜமைக்கா தல்லவாஸ் சாம்பியன்

கரீபியன் பிரிமியர் லீக் டி20 (சிபிஎல் டி20) தொடரில் ரோவ்மன் பாவெல் தலைமையிலான ஜமைக்கா தல்லவாஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கயானாவில் நடந்த பைனலில் டாஸ் வென்று பேட் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. அஸம் கான் 51, ரகீம் கார்ன்வால் 36, கேப்டன் கைல் மேயர்ஸ் 29, ஜேசன் ஹோல்டர் 17 ரன் விளாசினர்.

ஜமைக்கா பந்துவீச்சில் பேபியன் ஆலன், நிகோலஸ் கார்டன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜமைக்கா தல்லவாஸ் 16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து வென்றது. கென்னர் 0, புரூக்ஸ் 47 ரன்னில் வெளியேறினர். பிராண்டன் கிங் 83 ரன் (50 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), பாவெல் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆலன் ஆட்ட நாயகன் விருதும், கிங் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: