ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண் பலாத்காரம்: பூசாரி கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள ஒற்றசேகரமங்கலம் மைலச்சல் பகுதியை சேர்ந்தவர் சோனு என்ற வினீஷ் (32). மாரநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் கோயிலுக்கு வந்த ஒரு இளம்பெண்ணுடன் வினீஷுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அதன்படி தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் பழகி வந்து உள்ளார். அப்போது அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோவும் எடுத்து உள்ளார். நாளடைவில் அனீஷ் இளம்பெண்ணை தவிர்க்கத் தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில்  திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். மேலும் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியும் உள்ளார்.

இதையடுத்து இளம்பெண் மாரநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் ே்பரில் போலீசார் பூசாரி வினீஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அனீஷ் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் வினீஷ் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அனீஷை கைது செய்தனர்.

Related Stories: