திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி  பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகாத பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: