கே.வி.குப்பம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை மந்தம்

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஆட்டுசந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும். தற்போது ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில்  புரட்டாசி 2வது திங்கட்கிழமையான இன்று காலை வழக்கம் போல் ஆட்டு சந்தை தொடங்கியது.  வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான குடியாத்தம், காட்பாடி அணைக்கட்டு, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளும், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும்  நூற்றுக்கணக்கானோர் தங்களது ஆடுகளை வியாபாரத்திற்காக கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் வழக்கத்தை விட  இன்று ஆடுகள் வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே காாணப்பட்டது. மேலும் எதிர்பார்த்ததை விட கூடுதல் விலைக்கு  ஆடுகள் விற்பனை ஆகவில்லை. சிலர் வந்த விலைக்கே விற்று சென்றனர்.  வழக்கமாக 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகும். அதாவது சராசரியாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆகும். ஆனால் இன்று 100 ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையிலேயே விற்பனை ஆனதாக விவசாயிகள் கூறினர். சிலர் சரியான விலை இல்லாததால் ஆடுகளை மீண்டும் வீட்டிற்கே  ஓட்டிச்சென்றனர்.

Related Stories: