பான் பசிபிக் ஓபன் சாம்சனோவா சாம்பியன்

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை லிட்மிலா சாம்சனோவா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் மோதிய சாம்சனோவா 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 6 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் சாம்சனோவா வென்ற 3வது சாம்பியன் பட்டம் இது.

Related Stories: