பெண் நிருபரை ஆபாசமாக திட்டியதாக நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது போலீசார் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பெண் நிருபரை ஆபா சமாக திட்டியதாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘22 பீமேல் கோட்டயம்’, ‘உஸ்தாத்  ஓட்டல்’, ‘கும்பளங்கி  நைட்ஸ்’, ‘வைரஸ்’ உள்பட பல படங்களில்  நடித்தவர், ஸ்ரீநாத் பாஷி. அவர் நடித்துள்ள ‘சட்டம்பி’ என்ற படம் கடந்த 23ம் தேதி வெளியானது. இப்படம் தொடர்பாக  யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீநாத் பாஷி பேட்டி அளித்தார். அப்போது நேர்காணல் செய்த பெண் நிருபர், அவர் மனம் புண்படும்படியான கேள்வியைக் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீநாத் பாஷி, பேட்டி எடுத்த அந்த பெண் பத்திரிகையாளரையும், அந்த குழுவையும் ஆபாசமாக திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெண் நிருபர் மராடு போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, ஸ்ரீநாத் பாஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‘ஒருவன் தன்னை அவமானப்படுத்தும்போது என்ன செய்வானோ, அதைத்தான் நானும் செய்தேன். என்மீதான இவ்வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார்.

Related Stories: