இந்தியா அபார வெற்றி

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மைதானம்  ஈரப்பதமாக இருந்ததால் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 ஓவரில்் 5  விக்கெட் இழப்பிற்கு 90 ரன் குவித்தது. பின்ச் 31(15பந்து)ரன், கீப்பர்  வாடே 43(20பந்து,அவுட் இல்லை)ரன்கள் எடுத்தனர்.

அக்‌ஷார் படேல் 2, பும்ரா 1  விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்  இழப்பிற்கு 92 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன்  செய்தது.

Related Stories: