மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் எமி ஜாக்சன்

சென்னை: தமிழில் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் எமி ஜாக்சன். மதராசபட்டினம், ஐ, தெறி, தங்கமகன், 2.0, தாண்டவம் உள்பட பல படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்தவர். இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்தார். இவர்களின் காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பிறகு லண்டனை சேர்ந்த தொழிலதிபரை காதலித்தார். இந்த காதலும் முறிந்த பிறகு ஆங்கிலேயரான ஜார்ஜ் பனாய்ட்டவ் என்பவரை எமி காதலித்தார். இதில் அவருக்கு திருமணத்துக்கு முன்பே குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு தயாராகும்போது, இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து லண்டனை சேர்ந்த ஒருவரை இப்போது எமி காதலித்து வருகிறார். இப்படி நடிப்பிலிருந்து ஒதுங்கி, காதலிப்பதில் பிசியாக இருந்து வந்தார் எமி ஜாக்சன். இந்நிலையில் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய், தற்போது அருண் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் நடிக்க எமி ஜாக்சனை தேர்வு செய்தார். அவரும் கால்ஷீட் கொடுத்து இதில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories: