பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ் உட்பட ஆயுஷ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் உட்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம்  கல்வியாண்டில் ஆயுஷ் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மருத்துவப் பட்டமேற்படிப்பு-  அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை), மருத்துவப் பட்டப்படிப்பு அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மருத்துவப் பட்டப்படிப்பு - சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மருத்துவப் பட்டயப்படிப்பு அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கு மேலே பட்டியலிடப்பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு அக்டோபர் 12ம் தேதிக்குள் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: