வரும் 19ம் தேதி ஜே.பி.நட்டா முன்னிலையில் புதிய கட்சியை பாஜகவில் இணைக்கும் அமரீந்தர் சிங்: பஞ்சாப் அரசியலில் அடுத்த திருப்பம்

பாட்டியாலா: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது புதிய கட்சியை வரும் 19ம் தேதி பாஜகவுடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று  மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன்பின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) என்ற புதிய கட்சியை ெதாடங்கி பேரவை தேர்தலை எதிர்கொண்டார்.

ஆனால் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார். அடுத்த சில வாரங்களில் பஞ்சாப்  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், பாஜகவில்  தன்னை இணைந்துக் கொண்டார். இந்நிலையில் வரும் 19ம் தேதி டெல்லி பாஜக  தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை கேப்டன்  அமரீந்தர் சிங் சந்திக்கிறார். அவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: