சில நேரங்களில் மின் கட்டணம் அரசியலாக்கப்படுகிறது: கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: சில நேரங்களில் மின் கட்டணம் அரசியலாக்கப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்.டி. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அக்கட்டணம் இல்லை.

கடந்த காலங்களில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறது. சில நேரங்களில் மின் கட்டணம் அரசியலாக்கப்படுகிறது என்றார். 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ரூ.55 மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Related Stories: