சென்னை: சென்னையில் நடைபெறும் உலக மகளிர் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் காலிறுதியில் விளையாட போலாந்து வீராங்கனை மாக்தா லினெட் தகுதிப் பெற்றுள்ளார்.
சென்னை நுங்கை அரங்கில் நடக்கும் சென்னை ஓபன் போட்டியில் ஒற்றயைர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்களும், இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்களும் நடந்தன. நடுகளத்தில் நடந்த 2வது சுற்றில் நேற்று போலாந்து வீராங்கனை மாக்தா லினெட்(30வயது, 67வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை ஒக்சனா செலேகமேடேவா(19வயது, 142வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.