லடாக் எல்லையில் இருந்து இந்தியா, சீனா படைகள் திட்டமிட்டபடி விலகல்: ராணுவ தளபதி தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய-சீன வீரர்கள் இடையே கடும் மோதல் நடந்தது.    இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வந்தன. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் , கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது என இரு தரப்பு ராணுவ அதிகாரிகள்  இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. அதன் படி ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின் கீழ் படைகள் விலக்கும் நடைமுறைகள் கடந்த 8ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்து கடந்த 10ம் தேதி ராணுவ  தலைமை தளபதி மனோஜ் பாண்டே  நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில்,டெல்லி மானேக்சா மையத்தில் நேற்று நடந்த ராணுவ கருத்தரங்கில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், ‘‘இருநாட்டு படைகளும்  திரும்ப பெறும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்றார். படை விலக்கல் நடைமுறைகள் 12ம் தேதிக்குள்(நேற்று) முடிந்து விடும் என்று ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: