சருமத்தை பளபளக்க செய்யும் குல்கந்து!

நன்றி குங்குமம் தோழி

ரோஜா மலர்... காதலின் சின்னம் என்று சொல்லலாம். ஒருவரின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த ஒரு ரோஜா மலரே போதுமானது. அப்படிப்பட்ட ரோஜாவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன...

*ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

*ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.

*குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.

*ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.

*ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.

*பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.

*ரோஜா இதழ்களை வேளைக்கு 1 கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

*ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தைச் சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் அகலும்.

*50 ரோஜா இதழ்களை அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அத்தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி விடும்.

*10 கிராம் ரோஜா இதழ்களை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும்.

*ரோஜா இதழ்களுடன் 2 மடங்கு கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்து, இதை காலை, மாலையில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். 1 மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும்.

- அபர்ணா சுப்பிரமணியம், சென்னை.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>