வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம்: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

கொல்கத்தா: வௌிநாடு தப்பிச் செல்ல முயன்ற மம்தாவின் உறவினரை கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் உறவினரான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் மைத்துனி (மனைவியின் தங்கை) மேனகா கம்பீர் நேற்றிரவு பாங்காங் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் சென்றார். அவரை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்றிரவு 9.30 மணியளவில் பாங்காக் செல்லும் விமானத்தில் செல்வதற்காக அபிஷேக் பானர்ஜியின் மைத்துனி விமான நிலையத்திற்கு வந்தார். மேற்கு வங்க நிலக்கரி ஊழலில் அவரது பங்கு குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதனால் அவர் வெளிநாடு செல்வதை தடுக்க முன்னறிப்பு நோட்டீஸ் எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதையடுத்து தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். தற்போது பாங்காங் தப்பிச் செல்ல முயன்றதால், அவர் தடுத்து வைக்கப்பட்டார். நாளை (செப்டம்பர் 12) அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டிய நிலையில், அவரது வெளிநாடு பயணம் தடுக்கப்பட்டது’ என்று அவர்கள் கூறினர்.

Related Stories: