மும்பை: கேத்ரினா கைஃபின் அண்ணனை தீவிரமாக காதலித்து வருகிறார் இலியானா. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கிலும் இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இரண்டு வருடங்கள் நீடித்த இந்த காதல், திடீரென முறிந்தது. இந்நிலையில் கேத்ரினாவின் அண்ணனான செபஸ்டியன் மைக்கேல் என்பவரை இலியானா காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.