வருகிற 30ம் தேதி முதல் மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி இந்த நிகழ்ச்சி முதன் முதலில் ஒலிபரப்பப்பட்டது. கடைசியாக 2024 பிப்ரவரி 25ம் தேதி பிரதமரின் மனதின் குரல் ஒலிபரப்பானது. அதன் பின்னர் மக்களவை தேர்தலையொட்டி இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தல் காரணமாக கடந்த சில மாத இடைவெளிக்கு பின்னர் மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30ம் தேதி ஞாயிற்று கிழமை ஒலிபரப்பாகும். நீங்கள் அனைவரும் உங்களது ஆலோசனைகளை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமோ ஆப் அல்லது 1800117800 என்ற எண்ணில் உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வருகிற 30ம் தேதி முதல் மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: