மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, காஷ்மீர் 4 மாநில தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்: கார்கே, ராகுல் அடுத்தவாரம் ஆலோசனை

புதுடெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியும், அரியானா சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதியும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 5ம் தேதியும் முடிவடைய இருப்பதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் செப்.30ம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே 4 மாநிலத்திற்கும் செப்டம்பர் இறுதியில் தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் அல்லது அக்டோபரில் தேர்தல் நடத்தலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக 4 மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜூன் 24ம் தேதி முதல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். முதற்கட்டமாக ஜார்க்கண்ட் மாநில தலைவர்களை ஜூன் 24ம் தேதி சந்தித்து பேச உள்ளனர். அதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான கூட்டம் ஜூன் 25ம் தேதியும், அரியானா மாநில தலைவர்களுடன் ஜூன் 26ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் ஜூன் 27ம் தேதி வியூகக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, காஷ்மீர் 4 மாநில தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்: கார்கே, ராகுல் அடுத்தவாரம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: