கியூட்டுடன் ஜேஇஇ, நீட் தேர்வுகள் இணைப்பில்லை

புதுடெல்லி: நாடு முழுவதும் உயர்கல்விக்காக நடத்தப்படும் தேசிய தேர்வுகளான நீட், ஜேஇஇ, கியூட் ஆகிய 3 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் முதன்மையான தேர்வுகளான இந்த 3 தேர்வுகளையும் ஆண்டுதோறும் 43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இனி வரும் காலங்களில் தேசிய நுழைவு தேர்வுகளான  நீட், ஜேஇஇ  உள்ளிட்ட தேர்வுகள் கியூட் நுழைவு தேர்வுடன் இணைக்கப்படும் என்று  பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கடந்த மாதம் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜஸ்தானில் நேற்று அளித்த பேட்டியில், ‘நீட், ஜேஇஇ, கியூட் ஆகிய நுழைவு தேர்வுகளையும் ஒன்றாக இணைக்கலாமா என்ற கருத்து அரசிடம் உள்ளது. அது பற்றி கொள்கை முடிவு எதுவும் அரசு எடுக்கவில்லை. மூன்று தேர்வுகளையும் ஒன்றிணைப்பது குறித்து முடிவு எடுப்பதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகலாம். எனவே மாணவர்கள் இதை பற்றி அச்சப்பட  வேண்டாம்,’ என தெரிவித்தார்.

Related Stories: