ஏழுமலையான் கோயில் அரை நாள் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 12 மணி நேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் ஏழுமலையான் கோயில் கதவுகள் இந்த 2 நாட்களும் 12 மணிநேரம் மூடப்பட உள்ளது. அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், அன்று கோயில் கதவுகள் காலை 8:11 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7:30 மணிக்கு சுத்தம் செய்து ஆகம விதிகளின்படி தோஷ நிவாரண பூஜைகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும்.

இதேபோல், நவம்பர் 8ம் தேதி மதியம் 2:39 முதல் 6:19 வரை சந்திர கிரகணம் என்பதால் கோயில் கதவுகள் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இந்த 2 நாட்களில் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் போன்ற அனைத்து ஆர்ஜித சேவைகளையும் இந்த 2 நாட்களும் ரத்து செய்யப்படுகிறது. இந்த 2 நாட்களிலும் வைகுண்டம் காம்பளக்ஸ் வழியாக கோயில் கதவுகள் மீண்டும் திறந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: