தென்கொரியா இளம்பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழக வாலிபர்: வாணியம்பாடியில் இன்று திருமணம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (33). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக தென்கொரியா சென்றார். அங்கு டாக்டர் பட்டம் பெற்ற பிரவீன்குமார், தற்போது அங்கேயே தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரும் தென்கொரியா நாட்டில் உள்ள பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் (30) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். காதலர்களான தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளனர். அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து காதலியின் பெற்றோர் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இளம்பெண் சேங்வான்முன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட உறவினர்கள் கடந்த வாரம் இந்தியா வந்தனர். இன்று காலை வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரவீன்குமார்-சேங்வான்முன் திருமணம் சிறப்பாக நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: