ஆர்.கே.பேட்டை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிர்விப்பு மையம்; அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ரூ.25 லட்சத்தில் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ஆவடி   சா.மு.நாசர் திறந்து வைத்தார். ஆர்.கே.பேட்டை பகுதி பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா  நடந்தது. இதில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார்‌. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்து பால் கொள்முதலையும் தொடங்கி வைத்தார். மேலும் ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ள பால் குளிர்விப்பு மையத்தை, இப்பகுதி பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்‌.பூபதி, ஆவின் மாவட்ட துணை பதிவாளர் சித்ரா, உதவி பொது மேலாளர் சுவர்ணகுமார், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.தென்னரசு, ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி,  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் சி.என்.ரவி, ஆர்‌.கே.பேட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏ.எஸ்.செழியன், பி.கே.சீனிவாசன், ஜெய்சங்கர், புவனேஸ்வரி வெங்கடாஜலம்,  ஆர்.எம்.கணேசன் சீராளன், எஸ்.ஆர்.செங்குட்டுவன், பெருமாள், கிளைச் செயலாளர் முனிரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: