வத்தலக்குண்டு அருகே கதிகலக்கியது இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

*ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே நடந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் முத்தாலம்மன் ேகாயில் திருவிழாவையொட்டி நேற்று மாநில அளவிலான 14வது ஆண்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக நடந்த போட்டிகளில் திண்டுக்கல், தேனி, கம்பம், பழநி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜி.தும்மலப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு புறவழிச்சாலை வரை 10 கிமீ போட்டியின் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.

மூன்று பிரிவுகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.30,001, ரூ.20,001, ரூ.10,001 மற்றும் வெள்ளி தார் கம்பு, கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பீரோ, கட்டில், சேர், சைக்கிள் போன்றவையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

The post வத்தலக்குண்டு அருகே கதிகலக்கியது இரட்டை மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: