தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் தொழில் முனைவோர் சங்கம் தொடக்கம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை தலைவர் மணி தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவி சங்கீதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சரவணன், துணை முதல்வர் ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி உரையாற்றினர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தனியார் மென்பொருள் நிறுவன சிஇஓ சந்தீப் பாலகிருஷ்ணன், கணபதி  பழனிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அவர்கள், ‘’சொந்த முயற்சியை தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு வணிகத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டில், வேலையின்மை விகிதத்தை குறைக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்முனைவு முக்கியம்’ என்று உரையாற்றினர். இதையடுத்து சங்க உறுப்பினர்களிடையே தேர்தல் நடைபெற்று தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவி ஷர்மிளா நன்றி கூறினார்.

Related Stories: