நாட்றம்பள்ளி அருகே ஆராய்ச்சி செய்வதாக மலை மீது 2 நாள் தங்கிய இளைஞர்

நாட்றம்பள்ளி: கேரளாவை சேர்ந்தவர் முகமது நாசிக் அப்பா(24). இவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தலதாப் மலைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தார். பின்னர் இந்த மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு  மலை மீது ஆராய்ச்சி செய்வதாக கூறி சென்றுள்ளார். இரண்டு நாட்களாகியும் மலையில் இருந்து இறங்காமல் இருந்துள்ளார். மேலும் அவர் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து நாட்றம்பள்ளி போலீசார் வந்து மலை மீது இருந்த கேரள வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கேரள வாலிபர் எதற்காக மலையில் தங்கினார்? எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

Related Stories: