மர்மமாக இறந்த நடிகை சோனாலி; போகத் வீட்டில் 3 ரகசிய டைரிகள் சிக்கியது

ஹிசார்: கோவா பார்ட்டியில் கலந்துகொண்டு மர்மமான முறையில் இறந்த நடிகை சோனாலி போகத் வீட்டில், தொடர்ந்து 3வது நாளாக போலீசார் சோதனை நடத்திய நிலையில், சோனாலி போகத் வீட்டிலுள்ள லாக்கருக்கு சீல்  வைக்கப்பட்டது. அதில் இருந்த 3 ரகசிய டைரிகளை போலீசார் எடுத்துச் சென்றனர். அரியானா  மாநிலத்தை சேர்ந்த பாஜ நிர்வாகியும், நடிகையுமான சோனாலி போகத் (42),  கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வடக்கு கோவாவில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்தார்.  பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் சாந்த் நகரிலுள்ள சோனாலி போகத்  வீட்டில் கடந்த 3 நாட்களாக கோவா போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.  இதுவரை அந்த வீட்டில் இருந்து 3 ரகசிய டைரிகளை போலீசார் கைப்பற்றினர். பிறகு சோனாலி  போகத்தின் படுக்கை அறை, அலமாரி, பாஸ்வேர்டு பாதுகாக்கப்பட்ட லாக்கர்  ஆகியவற்றை போலீசார் சோதனையிட்டனர். மேலும், சோனாலி போகத் வீட்டிலுள்ள  லாக்கருக்கு போலீசார் சீல் வைத்தனர். இதுகுறித்து கோவா போலீஸ் இன்ஸ்பெக்டர்  தெரோன் டி’கோஸ்டா கூறுகையில், ‘சோனாலி போகத் மரணத்தில் மர்மங்கள்  நீடிப்பதால், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’என்றார்.

Related Stories: