சிறுத்தையை வெட்டி கொன்ற தொழிலாளி தாக்கியதால் ஆத்திரம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மாங்குளம் கிராமம். இந்த கிராமத்திற்குள்  சில தினங்களுக்கு முன்  புகுந்த ஒரு சிறுத்தை, கோழிகள் மற்றும் ஆடுகளை அடித்துக் கொன்றது. இதனால், சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வலை, கூண்டுகளை வைத்தனர். இந்த வலையில் இரு தினங்களுக்கு முன் ஒரு சிறுத்தை  சிக்கி, தப்பி விட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கோபாலன் என்ற தொழிலாளி தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது,  வழியில் பதுங்கி இருந்த சிறுத்தை, அவரை தாக்கியது. அவருக்கு கழுத்து, கையில் ரத்தம் கொட்டியது. இருப்பினும், அவர் பாதுகாப்புக்காக எடுத்து சென்ற அரிவாளால் சிறுத்தையை வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த சிறுத்தை சுருண்டு விழுந்தது.  சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து, சிறுத்தையை  தாக்கினர். இதில், சிறுத்தை  இறந்தது. கோபாலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: