தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி; ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் தூய்மை பணியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகர் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் அரசு கட்டிடங்கள், ஊராட்சியில் உள்ள பொது இடங்கள், அங்கன்வாடி மையம், நூலகம், இ சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை தூய்மை செய்யும் பணி முழு வீச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  உயர்நிலைப் பள்ளியை தூய்மை செய்யும் பணியினை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகர் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு தேவைகள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது, பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் இல்லை சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட குழு தலைவர் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினர். மேலும், கூடுதல் கழிவறை, வகுப்பறை கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், துணை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கிராம பிரமுகர்கள் உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள, தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: