இங்கிலாந்து வளர்ச்சிக்காக இறுதி வரை உழைப்பேன்: இறுதி பிரசாரத்தில் சுனக் பேச்சு

லண்டன்: இங்கிலாந்துக்காகவும், கன்சர்வேட்டிவ்  கட்சிக்காகவும் இரவு பகலாக உழைப்பேன் என்று பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த செவ்வாய்கிழமை  இவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம்  முடிந்தது.

இந்த பிரசாரத்தின்போது ரிஷி  பேசுகையில், ‘என்னால் வளர்ச்சிக்கான அடிக்கல்லை நட முடியும். வரிக்குறைப்பு செய்ய முடியும். பிரக்சிட்டை பயன்படுத்தி ஆரோக்கியமான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இங்கிலாந்துக்காகவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்காகவும் இரவு பகல் பாராமல் இறுதிவரை உழைப்பேன்,’ என தெரிவித்தார். பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு இன்று நிறைவடையும் நிலையில், வரும் 5ம் தேதி  முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதில், சுனக்கின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Related Stories: