ஒசாகா: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 2வது சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிக்கு பிறகு ஜப்பானின் ஒசாகா நகரில் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டி நடைபெறுகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், ஹாங்காங்கின் கா லாங் அங்குசை எதிர்கொண்டார்.
