தைவானுக்கு எம்பி பயணம் சீனாவுக்கு டென்ஷன் ஏற்றுகிறது அமெரிக்கா

தைபே: தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அது தனி நாடாக செயல்படவே விரும்புகிறது. இந்நிலையில், தனது கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் சென்றதால் சீனா ஆத்திரம் அடைந்தது. தைவானை தாக்கும் வகையில், அந்த நாட்டை சுற்றி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்பி.க்கள் குழுவும் இண்டியானா மாகாண ஆளுநர் எரிக் ஹோல்காம்ப்பும் தைவான் சென்றனர். இந்நிலையில், அமெரிக்க செனட் எம்பி.யான மார்ஷா பிளாக்பர்ன், நேற்று தைவான் சென்றார். ஒரே மாதத்தில் 2வது முறையாக அங்கு சென்ற அவர், அதிபர் இங் வென்னை சந்தித்து பேசினார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: