பரந்தூர் விமான நிலைய விவகாரம் காஞ்சிபுரத்தில் இன்று பாமக கருத்து கேட்பு

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு தொடர்பாக, அப்பகுதி பொதுமக்களிடம் அன்புமணி  காஞ்சிபுரத்தில் இன்று காலை கருத்து கேட்கிறார். இதுகுறித்து, பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பரந்தூரில் மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனால், பரந்தூர் பகுதி மக்களிடம் ஒரு வித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாமக, காலை காஞ்சிபுரம் அருணா திருமண மண்டபத்தில் 10 மணிக்கு இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துகிறது. அன்புமணி கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்கிறார்.

Related Stories: