பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசுவார்: ரவிசாஸ்திரி நம்பிக்கை

மும்பை: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பைக்கான டி20 போட்டி வரும் 28-ம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் விளாசுவார் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில்; இயல்பான மனநிலையில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி வலுவாக மீண்டு வருவார், அவர் ஆசியக்கோப்பையில்பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்தால் எஞ்சிய போட்டிகளுக்கு விமர்சகர்களின் வாயை அடைத்து விடுவார்.

மிகவும் திறமை வாய்ந்த வீரரான விராட் கோலி உரிய நேரத்தில் பார்முக்கு திரும்பிவிடுவார். மோசமாக விளையாடும் தருணத்தை எதிர்கொள்ளாத வீரர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது என ரவிசாஸ்திரி கூறினார். மேலும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Related Stories: