லேசான கொரோனா தொற்று; டிராவிட் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது குறித்து நாளை முடிவு.! ஹராரேவில் இருந்து லட்சுமணன் துபாய் பயணம்

மும்பை: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு  அமீரகத்தில் வரும் 27ம் தேதி முதல் செப்.11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிநேற்றிரவு  பெங்களூருவில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றது. ஜிம்பாப்வே தொடரில் ஆடிய கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, அக்சர்பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் ஹராரேவில் இருந்து இன்று துபாய் வந்து சேர்கின்றனர். டி.20 போட்டியாக நடைபெறும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்திய அணியினருடன் துபாய் செல்ல வில்லை. இந்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் பணியாற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாளை அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் உடனடியாக துபாய்புறப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. டிராவிட்டிற்கு கொரோனா அறிகுறிகள் லேசானவை. எனவே அவருக்குப் பதிலாக விவிஎஸ் லட்சுமணனை அனுப்ப வேண்டுமா இல்லையா என்பதை நாங்கள் காத்திருந்து பின்னர் முடிவு செய்வோம். லட்சுமணன் ஹராரேவில் இருக்கிறார், அவர் இன்று துபாய்க்கு விமானத்தில் செல்லவுள்ளனர். டிராவிட்டின் நிலைமை தெளிவடையும் வரை லட்சுமணனை துபாயில் சில நாட்கள் தங்கும்படி கேட்டுக்கொள்ளப்படும் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: