உத்தவ்-ஷிண்டே விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை: தேர்தல் ஆணையத்துக்கு தடை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உட்பட 38 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில் 16 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையே, 38 எம்எல்ஏ.க்களை வைத்துள்ள முதல்வர் ஷிண்டே, பாஜ ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்துள்ளார். இதற்கிடையே, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது,

அது தொடர்பான சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்பது தொடர்பாக உத்தவ், ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கட்சி சின்னம் கோரி ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது, தலைமை நீதிபதி ரமணா, ‘இந்த வழக்கு தகுதி நீக்கம், சபாநாயகர் மற்றும் ஆளுநரின் அதிகாரம் போன்றவை தொடர்பான முக்கிய அரசியலமைப்பு சிக்கல்களை எழுப்புகிறது. எனவே, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இவற்றை பரிந்துரைக்கிறோம். நாளை மறுநாள் (நாளை) வழக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும். அதுவரை உண்மையான சிவசேனா எனக் கருதி கட்சியின் சின்னத்தை வழங்குவதில் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது,’ என உத்தரவிட்டார்.

Related Stories: