தமிழகத்தில்தான் பாதாள சாக்கடை கழிவுநீர் வசதிகள் அதிகம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: திருச்சி தில்லைநகர் கிஆ.பெ விசுவநாதன் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. முகாமை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: ஒரே நேரத்தில் பாதாள சாக்காடை திட்டம், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடப்பதால் இந்த 2 திட்டங்களின்கீழ் 242 சாலைகள் போடப்பட்டுள்ளது. திருச்சியில் 2 மாதத்தில் சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடையும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம்.

தமிழகத்தில் தான் பாதாள சாக்கடை, கழிவுநீர் வசதிகள் அதிகமாக உள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை தடுக்க புதிய வாகனங்கள் வாங்கவுள்ளோம். இந்த விவகாரத்தில் மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வீடுகளிலோ, வணிக நிறுவனங்களிலோ சாக்கடை அடைப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய உள்ளாட்சி துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கக்கூடாது என்றார்.

Related Stories: