வடலூர்-கருங்குழி சாலையில் பாலம் அமைக்கும் பணி மந்தம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வடலூர்:  கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சவேரியார் நகர், நடேசன் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பள்ளமாக காணப்படுகிறது. கால்வாய் வசதிகள் இல்லாததால் தற்போது பெய்த மழையினால் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இவ்வாறு தேங்கி நிற்கும் மழை நீரால்  மழைக்காலங்களில் கொசுக்களால் பரவி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் வர நேரிடும் என இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: