வடலூர்-கருங்குழி சாலையில் பாலம் அமைக்கும் பணி மந்தம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வடலூர்: வடலூர்- கருங்குழி செல்லும் சாலையில் புதியபாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடலூர் அருகே கருங்குழி செல்லும் சாலையில் ஏற்கனவே பாலம் இருந்தது. அதை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி துவங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த பாலம் வழியாக தான் கொளக்குடி, மேட்டுக்குப்பம், நைனார்குப்பம் ஆகிய ஊருக்கு இந்த பாலம்மக்கள் செல்ல வேண்டும். இங்கு தனியார் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, வள்ளலார் சித்தி வளாகம், தீஞ்சுவை நீரோடை, ஆதரவற்றோர் முதியோர் இல்லம் மற்றும் மாணவர் இல்லம் மற்றும் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு செல்லும் குடிமகன்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக செல்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய பாலம் அமைக்கும் பணியை வெகு விரைவாக முடித்து பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: