மாநில எல்லைகளில் அச்சுறுத்தல் மக்கள் தொகை மீது ஒரு கண் வையுங்கள்: டிஜிபி.க்களுக்கு அமித்ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்த மாநாடு நேற்று தொடங்கியது. இதில், அனைத்து மாநில டிஜிபிக்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய அமித்ஷா, “மாநில எல்லை பகுதிகளில் நடக்கும் மக்கள் தொகை மாற்றங்களை அந்தந்த மாநில டிஜிபிக்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் அது சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிப்பது டிஜிபி.க்களின் பொறுப்பாகும். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமல்ல; அனைத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பலப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு, இளைஞர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் என்பதால் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநில தீவிரவாதம், நக்சலைட் ஆகியவற்றை ஒழிப்பதில் ஒன்றிய அரசு வெற்றி பெற்றுள்ளது,” என்றார்.

Related Stories: