போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: திருவள்ளூர் டிஎஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: திருத்தணியில் உள்ள ஜிஆர்டி இன்ஸ்டியூட் ஆப் பார்மசியூட்டிகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி நிர்வாக அலுவலர் சசிகுமார், முதல்வர் ஆர்.மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். பேரணியை திருவள்ளூர் டிஎஸ்பி கோ.சந்திரதாசன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி பேசுகையில், ‘மாவட்ட முழுவதும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் சமூகத்தில் நன்கு படித்து நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களாக விளங்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் பத்ம பபி, எஸ்ஐ கணேஷ் மற்றும் போலீசார், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: