பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் ஜிக்பேக் முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே செல்வதற்கு 4 பெட்டிகள், கீழே இறங்குவதற்கு 4 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கரூரில் இருந்து நவீன வடிவமைப்பில், நீண்ட நாட்களுக்கு முன்பே 10 புதிய பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், உயரம் தொடர்பான பிரச்னையில் இந்த பெட்டிகளை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த பெட்டிகளில் 2 பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த 2 பெட்டிகளை நேற்று ரோப்காரில் பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வல்லுநர் குழுவின் ஆய்விற்கு பிறகு புதிய பெட்டிகள் அனைத்தையும் பொருத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: