சின்னசேலம் கலவர வழக்கில் மேலும் 69 பேருக்கு ஜாமீன் விழுப்புரம் கோர்ட் உத்தரவு

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 69 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த சம்வபத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த  கலவர வழக்கு தொடர்பாக போலீசார் 322 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதில் 296 பேர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏற்கனவே 64 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் மீதமுள்ள மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: