கடமலை மயிலை ஒன்றியத்தில் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்புச்சுவர் சேதம்: விவசாயிகள் கவலை

வருசநாடு: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌க.மயிலாடும்பாறை. அருகே மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் அதிகளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது இதனால் பல இடங்களில் மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டது. அத்துடன் தடுப்புச்சுவார் சேததத்தால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.இது சம்பந்தமாக ஏற்கனவே பலமுறை விவசாயிகள் இடிந்துபோன மற்றும் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை சேதமடைந்த தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.

முன்னதாக பணிகள் துவங்கும் வகையில் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின் அதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிகள் துவங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் சுவர் கட்டுமான மற்றும் சீரமைப்பு பணிகள் ஏதும் இதுவரை துவங்கப்படவில்லை.

இதுகுறித்து மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அய்யனார் கோவில், வருசநாடு, சிங்கராஜபுரம், தர்மராஜபுரம் உள்ளிட்ட மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக உள்ள நிலங்களின் அருகில் அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது, ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பல இடங்களில் வெள்ள தடுப்பு சுவர்கள் பலத்த சேதமடைந்தது ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் மூலவைகை ஆற்று தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் பாய்ந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது. இதுபோன்ற தொடர் இழப்பை எங்களால் ஈடுசெய்ய இயலவில்லை. எனவே இப்பிரச்னைக்கு முடிவு காண்பது அவசியமாக உள்ளது, எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: