லாரி லாரியாக சிமெண்ட் ஆலைக்கு செல்கிறது காலியாகிறது அரியமங்கலம் குப்பை கிடங்கு-பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி : அரியமங்கலம் குப்பை கிடங்கு முற்றிலும் அகற்றப்படும் பணி மும்முரமாக நடந்து வருவதால் பொதுமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருச்சி ஜில்லாவாக இருந்த காலத்தில் அன்றைய மக்கள் தொகை 76 ஆயிரம் ேபா். அன்றைய காலகட்டத்தில் இருந்தே இந்த அரியமங்கலம் பகுதியானது ஊருக்கு புறம்பாக உள்ள தாழ்வான பகுதி என்பதால், சுமார் 1870ல் இருந்தே இந்த அரியமங்கலம் பகுதி குப்பைக்களை சேகரிக்கும் இடமாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் இயற்கையான கழிவுகளை மட்டுமே சேகரிக்கும் இடமாக இருந்தது தற்ேபாது செயற்கையானவைகளையே அதிகளவில் சேகரிக்கும் இடமாக மாறியுள்ளது. 152 ஆண்டுகால நினைவு சின்னம் தான் இந்த குப்பை கிடங்கு என்று சொல்லலாம். அன்று மக்கள் குறைவு என்பதால், அதிகளவில் குப்பைகள் இல்லாமல் இருந்தது. தற்போது திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை 10 லட்சத்தையும் கடந்தாலும் நகர பகுதியில் உள்ள 3 லட்சம் மக்கள் தொகையால் குப்பைகளும் அதிகாித்துள்ளது.

நகர விரிவாக்கத்தால் மக்களும் இந்த பகுதிக்கு இடம்பெயா்ந்து வர ஆரம்பித்தனா். எனவே அதுவரை பாதிப்பு குறித்து அறியாத மக்கள் கல்வியும், நாகரீகமும், அறிவியலும் வளா்ந்த பிறகு குப்பைகளின் பாதிப்பை புரிந்து கொண்டு அவற்றை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தனா். அப்பகுதி மக்களால் ேகாரிக்கையும் வலுப்பெற்றது, பல போராட்டங்களும் நடைபெற்றது.

அதற்கு காரணம் திருச்சி மாநகா் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் அப்பகுதியில் அதிகளவில் பாதிப்படைந்தது. அதிலும் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேபோல் அடிக்கடி குப்பை குவியல்களில் தீப்பற்றி எரிவதால் காற்று மாசுபாடும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் திணறினார்கள். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுகள் மற்றும் பொதுமக்கள் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனா். இதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் அவ்வப்போது வாகன விபத்துகளும் அரங்கேறி வந்தது.

இந்நிலையில் மாநகராட்சியின் உதவியோடு, சீர்மிகு நகரம் திட்டத்தின் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் குப்பைகளை அகற்றும் பணியானது துவங்கியது. 2017லிருந்து கொஞ்சம் ெகாஞ்சமாக குப்பைகளை அள்ளும் பணி துவங்கியது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. சுமார் 3 வருடங்கள் இப்பணியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் பணிகள் துவங்கி தற்போது உள்ள 47.70 ஏக்கா் பரப்பளவில் உள்ள குப்பைகளில் 7.5 லட்சம் கனமீட்டர் குப்பைகளை இங்கிருந்து அகற்றப்பட்டு, அந்த குப்பைகள் அனைத்தும் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாலி லாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3.5 லட்சம் கனமீட்டர் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றையும் தற்போது அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் திருச்சி மாநகராட்சியில் குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது தரம்பிரித்து கொடுக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகள் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் மொத்தம் 45 இடங்களில் நுண்ணுயிர் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கொண்டுவரப்படும் மக்கும் குப்பைகள் அனைத்தையும் இயற்கை உரங்களாகவும், மின்சாரமாகவோ, எரிவாயுவாகவோ மாற்றும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் தற்போது மக்காத குப்பைகள் நாள் ஒன்றுக்கு 225 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை நேரடியாக சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கால் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சுவிட ஆரம்பித்துள்ளனா். குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் நன்றாக சுவாசிக்க முடியாத பொதுமக்கள் தற்போது அப்பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக விடுதலை அடைந்து வருகின்றனர். அந்த குப்பை கிடங்கு முற்றிலும் எப்போது அகற்றப்படுகிறதோ, அன்றே அவா்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாக பெருமூச்சு விடுவார்கள். தங்களுடைய அடுத்த சந்ததிக்கு சுத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி கொடுப்பது தான் அவா்களுடைய நீண்ட நாள் கனவு, அதை எதிர்நோக்கிய பயணத்தில் அப்பகுதி மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

Related Stories: