தி ஹேக்: நெதர்லாந்துக்கு எதிரான 2வது டி20ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து முதல் டி20ல் 16 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் டாஸ் வென்று களம் கண்ட நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. பாஸ் டி லீட் ஆட்டமிழக்கமல் 53 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஸ்டீபன் மைபர்க் 24, டாம் கூப்பர் 26, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 26* ரன் எடுத்தனர். நியூசி. தரப்பில் பிரேஸ்வெல் 2, டிக்னர், சோதி தலா 1 விக்கெட் எடுத்தனர்.