பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் (திமுக) தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செ.செ.சேகர் வரவேற்றார். சமீபத்தில் திமுக வில் இணைந்த ஒன்றிய குழுத் தலைவருக்கு திமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.